sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் வழிகாட்டி: சிகரம் தொட தெளிவான பாதை மாணவர், பெற்றோர் மன நிறைவு

/

தினமலர் வழிகாட்டி: சிகரம் தொட தெளிவான பாதை மாணவர், பெற்றோர் மன நிறைவு

தினமலர் வழிகாட்டி: சிகரம் தொட தெளிவான பாதை மாணவர், பெற்றோர் மன நிறைவு

தினமலர் வழிகாட்டி: சிகரம் தொட தெளிவான பாதை மாணவர், பெற்றோர் மன நிறைவு


UPDATED : ஏப் 07, 2026 09:42 AM

ADDED : ஏப் 07, 2026 09:47 AM

Google News

UPDATED : ஏப் 07, 2026 09:42 AM ADDED : ஏப் 07, 2026 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
பிளஸ் 2க்கு பின் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்து திருப்பூரில் 2 நாள் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெற்றனர்.

'தினமலர்' நாளிதழ், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வ வித்யாலயா நிறுவனங்கள் சார்பில், 'தினமலர்' கல்வி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் கடந்த, 4ம் தேதி துவங்கியது.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி, கருத்தரங்கை துவக்கி வைத்தனர்; 70க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகள் கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தன.

கருத்தரங்கில் பங்கேற்று, தெளிவு பெற்ற மாணவ, மாணவியர், கண்காட்சியை, பெற்றோருடன் பார்வையிட்டு படிப்புகள், அப்ளிகேஷன், அட்மிஷன் குறித்த விரிவான விபரங்களை அறிந்து கொண்டனர். இரண்டாவது நாளான நேற்றும் கருத்தரங்கம் நடந்தது. மாலை 06:30 மணி கண்காட்சி அரங்கை பங்கேற்றவர்கள் பார்வையிட்டனர்.

திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் 2 நாள் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. கல்லுாரி அரங்குகளைப் பார்வையிட மாணவ, மாணவியர் பெற்றோர் குவிந்தனர்.

வந்தார்கள்... வென்றார்கள்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கின் ஒரு பகுதியாக பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர் யஷ்வந்த் முதல் பரிசாக லேப்டாப் பெற்றார். இரண்டாவது பரிசாக டேப்லெட்டை மாணவர் சரண் பெற்றார். சுபஸ்ரீ, வினிதா, சுப்புலட்சுமி பாரிக், சஞ்சித் லோகநாதன், அகிலேஷ் ஆகிய ஐந்து பேரும் 'ஸ்மார்ட் வாட்ச்'சை பரிசாக பெற்றனர்.

கை நிறைய சம்பளத்துடன் உலகைச் சுற்றிவர வாய்ப்பு
'மரைன் கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனெஜ்மென்ட்' படிப்பு குறித்து மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, பேராசிரியர் சுரேஷ்குமார்:

கப்பல் துறையில் பணியாற்ற உடல் தகுதி மிக முக்கியம்; குறிப்பாகக் கண் பார்வை 99 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும். இத்துறையில் 90 சதவீத செய்முறைத் தேர்வுகளே என்பதால் அதிகப் பாடப்பொதி இன்றி, அனுபவ ரீதியாகத் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கலாம்.

எந்தப் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் அனுபவம் இன்றி மரைன் படிப்பில் சேரலாம். படிப்பு முடித்ததும் பாஸ்போர்ட், 'எஸ்.டி.சி.டபிள்யூ', 'சி.டி.சி.' ஆகிய ஆவணங்களைத் தயார் செய்தால், ஆரம்பத்திலேயே மாதம் 85 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெற முடியும். அதே போல், கேட்டரிங் படிப்பு பிளஸ் 2வை விட எளிமையானது; இதில் சாதிக்க அதிக மதிப்பெண்களோ அனுபவமோ தேவையில்லை.

இதன் மூலம் விமானம் மற்றும் ரயில்வே போன்ற மத்திய அரசுப் பணிகளில் சேரலாம். குறிப்பாகச் சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் அதிக வாய்ப்புகள் உள்ளதால், சம்பாதித்துக் கொண்டே உலகத்தைச் சுற்றி வர முடியும். எனவே, மாணவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளின் வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து, 'நாக் ஏபிளஸ்' அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லுாரிகளைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

வேளாண்மைப் படிப்பு பிரகாசமான எதிர்காலம்
'வேளாண் அறிவியல்' எனும் தலைப்பில், அமிர்தா இன்ஸ்டிடியூட் மாணிவாசகம்:

இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய விரிவானதொரு படிப்பே பி.எஸ்.சி., விவசாயம் ஆகும். இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கல்லுாரியில் சேரும் முன் நேரடியாகச் சென்று அங்குள்ள வேலைவாய்ப்பு வசதிகளை உறுதி செய்வது அவசியம்; ஏனெனில் நிறுவனங்கள் வெறும் பட்டத்தை மட்டும் பார்க்காமல் மாணவர்களின் தனித்திறமையையே எதிர்பார்க்கின்றன.

இப்பாடப்பிரிவு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., மற்றும் வங்கிப் பணி சார்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு பெரும் உறுதுணையாக இருப்பதோடு, மத்திய வேளாண் அமைச்சகம், காபி வாரியம் மற்றும் தென்னை ஆராய்ச்சி மையங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் வழங்குகிறது.

ஒவ்வொரு வங்கியிலும் ஒரு வேளாண் நிபுணர் பணியாற்றுவதுடன், விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லித் தயாரிப்பு நிறுவனங்களிலும் இவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது; விருப்பமுள்ளவர்கள் இத்துறையில் சுயதொழில் முனைவோராகவும் சாதிக்க முடியும்.

விவசாயம் சார்ந்த படிப்பு என்பதால் அலட்சியப்படுத்தாமல், சிறந்த பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் இத்துறை பிரகாசமான எதிர்காலத்தைத் தரும். செயற்கை நுண்ணறிவு போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் வந்தாலும் விவசாயமும் அதன் தேவையும் என்றும் குறையாது என்பதால், பாதிப் பாடத்திட்டம் செய்முறைப் பயிற்சிகளாகவே அமைந்திருக்கும் இப்பாடப்பிரிவை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வாழ்வில் உயரலாம்.

நுணுக்கங்கள் அறிந்தால் சாதனையாளராக முடியும்:
'கோர் இன்ஜினியரிங்' படிப்பு குறித்து, எஸ்.என்.ஆர்., கல்லுாரி, கிரேஸ் செல்வராணி பேசியதாவது:

தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் மொபைல் போன் முதல் விண்வெளியில் பாயும் 295 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வரை, அவற்றின் செயல்பாடுகளையும் நுணுக்கங்களையும் விரிவாகக் கற்றுக்கொள்வதே பொறியியல் படிப்பாகும். பிளஸ் 2 வரை படித்த இயற்பியல், வேதியியல் மற்றும் கணித அறிவியலைச் செய்முறைத் திட்டங்களுடன் இணைத்துச் செயல்படுத்துவதே இந்த உயர்கல்வியின் அடிப்படை.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளுக்கு டி.ஆர்.டி.ஓ., டாடா, மகேந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பேட்டரி வாகனங்களின் வருகையால் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைக்கும், செயற்கைக்கோள் மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இ.சி.இ., துறைக்கும் மவுசு அதிகரித்துள்ளது.

அப்துல் கலாம் முதல் சுந்தர் பிச்சை வரை பல சாதனையாளர்கள் மெக்கானிக்கல் பின்னணியைக் கொண்டவர்களே. கேள்வி கேட்கும் திறனும், புதிய தேடலும் கொண்ட மாணவர்களுக்கு பெல், இந்திய ரயில்வே மற்றும் மின் வாரியம் போன்ற அரசுத் துறைகளிலும், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் பேங்கிங், பின்டெக் படிப்புகள் குறித்து, எல்.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனெஜ்மென்ட், ஸ்டடிஸ் புரோகிராம் இயக்குனர் சுப்ரமணியன் பேசியதாவது:

பி.காம்., படிப்போடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இன்சூரன்ஸ் துறையை இணைத்துப் பயில்வதன் மூலம் வங்கி மற்றும் நிதித்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறலாம். குறிப்பாக, மொபைல் பேங்கிங், யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை மேலாண்மை, ஏ.ஐ., அடிப்படையிலான கிரெடிட் ஸ்கோரிங் போன்ற பணிகளில் ஈடுபட முடிவதோடு, நுழைவுத்தேர்வுகள் மூலம் வங்கிப் பணிகளிலும் சேர முடியும்.

அதே போல், பி.பி.ஏ., டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயில்பவர்களுக்கு எஸ்.இ.ஓ., சமூக ஊடக சந்தைப்படுத்துதல், கூகுள் விளம்பரங்கள், கன்டென்ட் கிரியேஷன் மற்றும் ஏ.ஐ., மார்க்கெட்டிங் டூல்ஸ் போன்ற நவீனத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போது ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி., தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதுமையான விளம்பரங்களை உருவாக்குபவர்களுக்கான தேவை பெருகியுள்ளது.

நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நவீனத் தொழில்நுட்பத் தேடல் கொண்ட மாணவர்களுக்கு இத்துறையில் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கனவு மெய்ப்படும்:

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, மாணவர்களின் கனவுகளை மெய்ப்படச் செய்வதாக அமைந்தது என்று மாணவர்களும், பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

விஸ்வேஸ்வரன்:
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மிகுந்த உதவியாக இருந்தது; தெளிவை ஏற்படுத்தியது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு எதை தேர்ந்தெடுக்கலாம் என்று ஒவ்வொருக்குமான வழிகாட்டலாக இருந்தது. பொதுத்தேர்வுக்கு பின் ஏற்பட்ட குழப்பம் உள்ளிட்ட அனைத்துக்கும் தீர்வு கிடைத்தது.

பிரியதர்ஷிகா:
வழிகாட்டி நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இதன் வாயிலாக சிறந்த தெளிவு கிடைத்துள்ளது. அனைத்து விதமான படிப்புகளுக்கு வல்லுனர்கள் சிறந்த கருத்துகளை கூறினர். பலருக்கும் பயனுள்ள ஒன்று. மேற்படிப்பு எப்படி தேர்ந்தெடுப்பது என, பல விதமான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.

சிவக்குமார்:
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முன்னெடுப்பை 'தினமலர்' மேற்கொள்கிறது. வழிகாட்டி நிகழ்ச்சி வாயிலாக பலர் பயனடைகின்றனர். தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாணவ, மாணவியருக்கு மேற்படிப்பு தொடர்பான ஏற்பட்ட குழப்பம் போன்றவற்றுக்கு அழகான தீர்வு கிடைத்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

சவீதா:
வழிகாட்டி பலருக்கும் பெரிய வழிகாட்டியாக இருக்கும். அனைத்து விதமான படிப்புகள் இருந்தாலும், நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அனைவருக்கும் தடுமாற்றம் இருக்கும். தெரியாதவர்களுக்கும் சிரமம். மாணவ, மாணவியர், மூன்று படிப்புகளை தேர்ந்தெடுத்து, அதில் ஒன்றை எப்படி தேர்வு செய்வது என, பல உதாரணங்களுடன் விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு தெளிவு கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us