sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பூமியின் இயற்கை வடிவில் உங்கள் பெயர்; நாசாவின் இந்த வசதி ரொம்ப ஜோர்

/

பூமியின் இயற்கை வடிவில் உங்கள் பெயர்; நாசாவின் இந்த வசதி ரொம்ப ஜோர்

பூமியின் இயற்கை வடிவில் உங்கள் பெயர்; நாசாவின் இந்த வசதி ரொம்ப ஜோர்

பூமியின் இயற்கை வடிவில் உங்கள் பெயர்; நாசாவின் இந்த வசதி ரொம்ப ஜோர்


UPDATED : ஏப் 29, 2026 09:53 AM

ADDED : ஏப் 29, 2026 09:54 AM

Google News

UPDATED : ஏப் 29, 2026 09:53 AM ADDED : ஏப் 29, 2026 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
நாசா இணையதளத்தில் உள்ள புதிய வசதியைப் பயன்படுத்தி, உங்களது பெயரை, பூமியின் இயற்கை அமைப்பு கொண்டு படமாக உருவாக்குவது, டிரெண்டாக மாறியுள்ளது.

நாசாவின் இணையதளத்தில், 'யுவர் நேம் இன் லேண்ட்சேட்' என்ற புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் 'யுவர் நேம் இன் லேண்ட்சேட்' என டைப் செய்து, இந்தப் பக்கத்துக்கு செல்லலாம். இங்கு, உங்களது பெயரை ஆங்கிலத்தில் உள்ளிட்டால், ஒவ்வொரு ஆங்கில எழுத்து வடிவத்தை ஒத்த, அதற்கு இணையான விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிலப்பரப்பு புகைப்படங்களை வரிசைப்படுத்தி, உங்களது பெயரை உருவாக்கும். குறிப்பிட்ட எழுத்துகளுக்கு இணையான ஆறு, மலை, ஏரி, சமவெளி என விதவிதமான படங்களை வரிசைப்படுத்தி, பெயர் உருவாக்கப்படும்.

நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்.,) என்ற 50 ஆண்டுகளுக்கும் மேல் பூமியைக் கண்காணித்து வரும் லேண்ட்சேட் செயற்கைக் கோளால், இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டைப் போல இருப்பினும், புவியமைப்புகளை சுவாரசியமாக பார்த்து ரசிக்கவும் புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கான படங்களின் மீது, 'கர்சரை' நகர்த்தினால் அது பூமியின் எந்தப் பகுதி என்பதையும் அதன் அட்ச ரேகை, தீர்க்க ரேகை அமைவிடத்தையும் சேர்த்து காண்பிக்கும். ஒரு பெயருக்கு ஒரே மாதிரியான படம் தான் என்றில்லை. வெவ்வேறு புகைப்பட சேர்க்கைகளையும் இந்தத் தளம் உருவாக்கித் தருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் பெயருக்கான படத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம். விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, புவி எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நாசாவின் இந்த புதிய வசதி தான் இணையத்தில் இப்போது டிரெண்ட்!
இணையதளத்தில் 'யுவர் நேம் இன் லேண்ட்சேட்' என டைப் செய்து, இந்தப் பக்கத்துக்கு செல்லலாம். இங்கு, உங்களது பெயரை ஆங்கிலத்தில் உள்ளிட்டால், ஒவ்வொரு ஆங்கில எழுத்து வடிவத்தை ஒத்த, அதற்கு இணையான விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிலப்பரப்பு புகைப்படங்களை வரிசைப்படுத்தி, உங்களது பெயரை உருவாக்கும்.







      Dinamalar
      Follow us