sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த மாணவர்களை உருவாக்கும் குரு கோவிந்த் கல்லூரி முதல்வர் ரேகா குப்தா பாராட்டு

சிறந்த மாணவர்களை உருவாக்கும் குரு கோவிந்த் கல்லூரி முதல்வர் ரேகா குப்தா பாராட்டு

சிறந்த மாணவர்களை உருவாக்கும் குரு கோவிந்த் கல்லூரி முதல்வர் ரேகா குப்தா பாராட்டு


UPDATED : மே 08, 2026 08:18 AM

ADDED : மே 08, 2026 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:18 AM ADDED : மே 08, 2026 08:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“தொழிலில் மட்டுமின்றி தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலும் மாணவர்களை தயார்படுத்துவதில், ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லுாரி முக்கியப் பங்கு வகிக்கிறது,” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசினார்.

டில்லி பல்கலையின் ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லுாரியின், 42வது ஆண்டு விழா நேற்று நடந்தது. துணைநிலை கவர்னர் தரஞ்சித் சிங் சாந்து, முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:

ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லுாரியில் கல்வி மட்டுமின்றி சமூகம் மற்றும் தேசப்பற்றும் கற்பிக்கப்படுகிறது. குரு கோவிந்த் சிங் என்ற பெயர், பல ஆண்டுகால தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்புடையது.

கடந்த, 1984ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கல்லூரி கல்வித் தரத்தில் உயர்ந்த நிலையை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இந்தக் கல்லூரி சிறந்து விளங்க சேர்க்கை நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையே காரணம்.

கல்வித்துறை மட்டுமின்றி, மன்றங்கள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகளிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் தான், இந்தக் கல்லூரியின் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

தொழிலில் மட்டுமின்றி தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியிலும் மாணவர்களை தயார்படுத்துவதில், ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லுாரி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதை தொடந்து, 2025 - 2026ம் கல்வி ஆண்டுக்கான கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் ரேகா சமர்ப்பித்தார்.

ஆலோசனை


விவேக் விஹார் மற்றும் பாலம் ஆகிய இடங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தையடுத்து, உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுப்பது குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை துவக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வெப்ப அலை மீட்பு வாகனம்

தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெப்ப அலை மீட்பு வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார். மேலும், வெப்ப அலை செயல் திட்ட கையேட்டை வெளியிட்டார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us