sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி பயில இட ஒதுக்கீடு சான்றிதழ் மாஜி படை வீரர்களை சார்ந்தவர்களுக்கு அழைப்பு

கல்வி பயில இட ஒதுக்கீடு சான்றிதழ் மாஜி படை வீரர்களை சார்ந்தவர்களுக்கு அழைப்பு

கல்வி பயில இட ஒதுக்கீடு சான்றிதழ் மாஜி படை வீரர்களை சார்ந்தவர்களுக்கு அழைப்பு


UPDATED : மே 15, 2026 10:14 PM

ADDED : மே 15, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 10:14 PM ADDED : மே 15, 2026 10:15 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
மாஜி படைவீரர்களை சார்ந்தோர் கல்வி பயில இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

வரும் கல்வி ஆண்டிற்கு முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம்., பி.பார்ம்., உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு, அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரை சார்ந்தோர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெறுதல் வேண்டும்.

முன்னாள் படைவீரரின் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர், சார்ந்தோரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நேரில் வர இயலாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர், exwelcud@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து சார்ந்தோர் சான்று பெற்று பயன் பெறலாம்.

மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்: 04142 - 220732ல் தொடர்பு கொண்டு உரிய விவரம் அறிந்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us