மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள், வெற்றி தேடி வரும்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள், வெற்றி தேடி வரும்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
UPDATED : ஜூன் 05, 2026 12:15 PM
ADDED : ஜூன் 05, 2026 12:15 PM

சென்னை:
கல்வி ஆண்டின் முதல் நாளை தொடங்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி உங்களைத் தேடி வரும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நேற்று (ஜூன் 04) பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இந்நிலையில் வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை:
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கல்வி தான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி.
உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
