தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் விளக்கம்

கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் விளக்கம்

கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் விளக்கம்


UPDATED : ஜூன் 14, 2026 11:40 AM

ADDED : ஜூன் 14, 2026 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 11:40 AM ADDED : ஜூன் 14, 2026 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜி., கவுன்சிலிங்கில், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு, சென்னையில் நேற்று நடந்த, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன் சிலிங், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டு தோறும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பி.இ., பி.டெக்., படிக்க விரும்பும் மாணவ மணவியர், கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து விளக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'ரா ஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து நடத்தும், 2026ம் ஆண்டுக்கான இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தி.நகர் வாணி மஹாலில் நேற்று நடந்தது. ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ராஜலட்சுமி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி பேசினார். இன்ஜி., படிப்புடன் இணைந்த திறன்கள் குறித்து, மாணவ, மாணவியருக்கு, அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அவரை தொடர்ந்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு செயலர் புருேஷாத்தமன் பேசினார்.

இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறைகள், இடஒதுக்கீடு, 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடும் முறை, ஆன்லைன் கவுன்சிலிங் அணுகுமுறை, கடந்த ஐந்தாண்டு 'கட்ஆப்' மதிப்பெண்கள் விபரம், கல் லுாரி மற்றும் பாட ப்பிரிவை தேர்வு செய்யும் விதம் மற்றும் மேல் நோக்கிய நகர்வு உட்பட, கவுன்சிலிங் தொடர்பாக, அவர் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜி., படிப்புகள் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், இன்ஜி., பாடப்பிரிவுகள், அதில் உள்ள வாய்ப்புகள் குறித்து, மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு, அவர் விளக்கம் அளித்தார்.

குத்தம்பாக்கம் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும், இன்ஜி., கவுன்சிலிங் இரண்டாவது நிகழ்ச்சி, குத் தம்பாக்கத்தில் உள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன வளாகத்தில், நேற்று மாலை நடந்தது.

இதில், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறன்கள் தொடர்பாக, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூடிட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மகேஸ்வரி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நடப்பு கல்வியாண்டு இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறை குறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை குழு முன்னாள் இயக்குநர் நாகராஜன் வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

மேலும், இன்ஜி., படிப்பில் உ ள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்த ல்களை வழங்கினார். நிகழ்வின் வாயிலாக தெளிவு கிடைத்ததாக, மாணவ, மாணவியர் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us