தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது: மோடி பெருமிதம்

உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது: மோடி பெருமிதம்

உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது: மோடி பெருமிதம்


UPDATED : ஜூன் 19, 2026 10:40 AM

ADDED : ஜூன் 19, 2026 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 10:40 AM ADDED : ஜூன் 19, 2026 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளை கொண்ட நாடாக உள்ளது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரீசில் நடந்த விவாடெக் மாநாட்டில் அவர் பேசியதாவது:

இம்மாநாட்டில் பங்கேற்க பாரீசில் இருப்பது பெருமை அளிக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்ச்சி. இதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

2026ம் ஆண்டு இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் சிறப்பான ஆண்டு. இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்தும். திறமை, தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியவற்றுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா விரைவான மாற்றத்தை சந்தித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள அமைப்பு உருவாக்கம் முதல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளங்கள் வரை, நிதி உள்ளடக்கம், கல்வி, டெலி மெடிசன், விவசாயம் உள்ளிட்டவற்றுக்காக தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம்.

யு.பி.ஐ., காரணமாக, இன்று உலகில் நடக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதி இந்தியாவில் நடக்கின்றன. இப்போது பிரான்சிலும் உள்ள ஈபிள் கோபுரத்தில் யு.பி.ஐ., பயன்படுத்தலாம்.

அனைவருக்கும் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஏ.ஐ., வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏ.ஐ., என்பது, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளை கொண்ட நாடாக உள்ளது. விதிமுறைகளை எளிதாக்கி, தொழில் செய்வதை எளிமையாக்குகிறோம்.

உலகின் மிகவும் மலிவான டேட்டா மற்றும் குறைந்த செலவிலான பசுமை ஆற்றலையும் இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் அணுகுமுறை தெளிவானது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us