தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழையும் வர வைப்பேன்... பனியும் உருவாக்குவேன்! வாவ் சொல்ல வைக்கிறார் வடவள்ளி பேராசிரியர்

மழையும் வர வைப்பேன்... பனியும் உருவாக்குவேன்! வாவ் சொல்ல வைக்கிறார் வடவள்ளி பேராசிரியர்

மழையும் வர வைப்பேன்... பனியும் உருவாக்குவேன்! வாவ் சொல்ல வைக்கிறார் வடவள்ளி பேராசிரியர்


UPDATED : ஜூலை 09, 2026 12:19 PM

ADDED : ஜூலை 09, 2026 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 12:19 PM ADDED : ஜூலை 09, 2026 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:
செயற்கை மழை அல்லது பனிப்பொழிவை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இந்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார், கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் கணேசன் வேதகிரி, 79.

பாரதியார் பல்கலையின் உளவியல் துறை முன்னாள் தலைவரான இவர், வடவள்ளியில் வசிக்கிறார். சுற்றுச்சூழல் உளவியல் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வரும் இவர், புவி வெப்பமயமாதல் மற்றும் 'சூப்பர் எல்-நினோ' பாதிப்புகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் செயற்கையாக மழை அல்லது பனிப்பொழிவை உருவாக்கவும், தேவையெனில் அதைக் கட்டுப்படுத்தவும் உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.

மலை உச்சியில் 950 மீட்டர் உயரத்தில், மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியை உருவாக்கினால், மேகங்கள் கீழிறங்கி மழை பெய்யும். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் செயற்கை மழையை உருவாக்க முடியும்.

அதே போல், அதிக மழை பெய்யும் பகுதிகளில் எலக்ட்ரிக்கல் பர்னஸ் மூலம் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உருவாக்கினால், அதன் தாக்கத்தால் காற்றும், மேகங்களும் மேல்நோக்கி நகரும். இதன் மூலம் அதீத மழையை கட்டுப்படுத்த முடியும்.

உகந்த மலைப்பகுதிகள் தமிழகத்தில் 1,800 மீட்டருக்கும் மேல் உயரமுள்ள கரந்தமலை, சிறுமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பிலிகிரி ரங்கன் மலை, நீலகிரி மலை, வருசநாடு மலை, சதுரகிரி, அகத்தியர் மலை, மகேந்திரகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகள் இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்றவை.

அணு மின் நிலையங்களைப் போல விபத்து அபாயம், கதிரியக்கக் கழிவு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பாதிப்புகள் இல்லாததால், இது பாதுகாப்பான, குறைந்த செலவிலான மாற்று மின் உற்பத்தி தொழில்நுட்பமாக அமையும். தேவையான அனுமதிகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட வேலைகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடலில் இருந்து மின்சாரம்!

கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும், 'டைடல் மில்' தொழில்நுட்பத்துக்கும் காப்புரிமை பெற்றுள்ளேன். கப்பல் போன்ற மிதக்கும் அமைப்பில் 32 சுழலும் கைகள் பொருத்தப்பட்டிருக்கும். கடல் அலைகள் அவற்றில் மோதும் போது, டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தியாகும். இந்தியாவின் 7000 கி.மீ., நீள கடற்கரையையும், தமிழகத்தின் 1000 கி.மீ.,க்கும் மேற்பட்ட கடற்கரையையும் பயன்படுத்தி, தடையின்றி மின்சாரம் தயாரிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us