தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? கேட்கிறார் அமைச்சர் ஆதவ்

கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? கேட்கிறார் அமைச்சர் ஆதவ்

கோவை நூலக முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் பேசாதது ஏன்? கேட்கிறார் அமைச்சர் ஆதவ்


UPDATED : நவ 08, 2026 02:25 PM

ADDED : நவ 08, 2026 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 02:25 PM ADDED : நவ 08, 2026 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோவை அறிவுலகத்தில் போலி நூல்கள் வாங்கி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை; அண்ணாதுரை, ஈவெரா பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.

இறுதியில் ஈவெராவின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் ஏஐ முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார். தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.

உலகிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து என்னும் சாதனையும் ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்தில் திமுக படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், ஏஐ ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது திமுக இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை!

இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான, குப்பையான, ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!

மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான முந்தைய அரசு.

ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு தவெக அரசை விமர்சித்து வந்த ஸ்டாலின், இந்தப் பிரச்னை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?

ஈ.வெ.ரா., அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழத்தில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, ஈவெரா அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈவெரா அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.

கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில் கோவை அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து 'திருடன்... திருடன்' என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை கைமாற்றிவிட்டு, 'திருடன் திருடன்' என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான்.

மக்களும் 'இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்' என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் திமுக போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது திமுக திருந்த வழி பார்க்கட்டும்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.

அந்தக் கொடிய விஷத்தை, முதல்வர் விஜய் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us