தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி


UPDATED : நவ 28, 2026 01:35 PM

ADDED : நவ 28, 2026 01:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 01:35 PM ADDED : நவ 28, 2026 01:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி:
பண்ருட்டி ஸ்ரீ.பி.முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ் ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து, 'பதில் சொல்; பரிசு வெல் ' என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பண்ருட்டி கஸ்துாரிபாய் தெருவில் உள்ள செயின்ட் ஆன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ பி.முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அவர்களில், 16 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, தகுதி சுற்று போட்டி நடந்தது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெஸிவிமலாராணி தலைமை தாங்கினார். போட்டி இறுதியில் பிளஸ் 1 மாணவிகள் பூஜாஸ்ரீ, சங்கீதா அணியினர் முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவி ஷீவாணி, 8ம் வகுப்பு மாணவி மோனிஷா அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியை ஜெஸிவிமலாராணி, அருட்சகோதரி மெர்லின், ஆசிரியர் கனிமொழி சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள், புதுச்சேரியில் மாநில அளவில் நடக்கும் மெகா வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us