தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழ வியாபாரியின் மகள் படிப்பு செலவை மவுன்ட் பார்க் பள்ளி ஏற்றது

பழ வியாபாரியின் மகள் படிப்பு செலவை மவுன்ட் பார்க் பள்ளி ஏற்றது

பழ வியாபாரியின் மகள் படிப்பு செலவை மவுன்ட் பார்க் பள்ளி ஏற்றது


UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM

ADDED : ஜூன் 04, 2011 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM ADDED : ஜூன் 04, 2011 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் செய்தியை பார்த்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 486 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தள்ளுவண்டி பழவியாபாரி மகளின் படிப்பு செலவை, மவுன்ட் பார்க் பள்ளி நிர்வாகம் ஏற்றது.


விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் நகரில், தள்ளுவண்டியில் பழம் விற்பனை செய்யும் வியாபாரி சிவக்குமார். இவரின் மகள் தமிழரசி; தியாகதுருகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் 486 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.


பழ வியாபாரம் செய்து வரும் சிவக்குமார் தனது மகளின் படிப்பு ஆர்வத்திற்கு ஏற்ற பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இது குறித்து, தினமலர் நாளிதழில், கடந்த 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதை பார்த்த தியாகதுருகம் மவுன்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருணா மணிமாறன், மாணவி தமிழரசியின் மேல்நிலைப் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.


மவுன்ட் பார்க் பள்ளியில் தமிழரசி உடனடியாக பிளஸ் 1 வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், தமிழரசியின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us