தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு


UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM

ADDED : ஜூலை 02, 2011 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM ADDED : ஜூலை 02, 2011 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் இதழ் செய்தி எதிரொலியால் சிதம்பரத்தில் குப்பை கொட்டும் இடம் மற்றும் சுடுகாட்டிற்கு அருகே இயங்கிய தொடக்கப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி புதிய கட்டடம் கட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


சிதம்பரம் அடுத்த சி.தண்டேஸ்வரநல்லூரில் கழிவுகளை கொட்டும் இடம் மற்றும் சுடுகாடு அருகே சுகாதார சீர்கேடான இடத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. படிப்பதற்கு லாயகற்ற நிலையிலும், நோய் பரவும் அபாயகரமான சூழ்நிலை இருப்பதால் உடனடியாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் மற்றும் தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி சார்பில் கலெக்டர் அமுதவல்லியிடம் மனு கொடுக்கப்பட்டது.


இதற்கிடையே பள்ளியின் நிலை குறித்து தினமலர் இதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பள்ளியை உடனடியாக சிவஜோதி நகர் விளையாட்டு மைதானம் உள்ள இடத்திற்கு மாற்றவும், புதிய பள்ளி கட்டடம் கட்டவும் கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us