தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராஜேந்திர சோழன் பட்டம் சூடிய விழா: அரசு விழாவாக கொண்டாட எதிர்பார்ப்பு

ராஜேந்திர சோழன் பட்டம் சூடிய விழா: அரசு விழாவாக கொண்டாட எதிர்பார்ப்பு

ராஜேந்திர சோழன் பட்டம் சூடிய விழா: அரசு விழாவாக கொண்டாட எதிர்பார்ப்பு


UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM

ADDED : ஜூலை 15, 2014 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM ADDED : ஜூலை 15, 2014 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலூர்: ராஜேந்திரசோழன் பட்டம் சூடிய 1,000வது ஆண்டு விழாவை கங்கை கொண்ட சோழபுரத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழன் மறைவுக்கு பின் 1014ம் ஆண்டு சோழ பேரரசின் மன்னராக பொறுப்பேற்றார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழ பேரரசு, ராஜேந்திர சோழன் காலத்தில் பரந்து விரிந்த பொற்கால ஆட்சியாக விளங்கியது. ராஜேந்திர சோழன் சோழ பேரரசின் எல்லைகளை வங்காளம் (பங்களாதேஷ்), மாலத்தீவு, கடாரம், மலேயா(சிங்கப்பூர்-மலேசியா), சுமத்திரா தீவு வரை விரிவுபடுத்தினார்.

மிகச்சிறந்த கப்பல் படையுடன் கடல் கடந்து படையெடுப்பு நடத்தி, வெற்றி கண்ட முதல் இந்திய பேரரசர் என்ற பெருமையை நிலைநாட்டியவர் ராஜேந்திர சோழன். மகிபாலனை வென்று வங்காளத்தை சோழ பேரரசுடன் இணைத்த ராஜேந்திர சோழன், அந்த வெற்றியை சிறப்பிக்க கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி தன் ஆட்சியை அங்கிருந்து செயல்படுத்த துவங்கினான்.

மேலும் தஞ்சை பெரிய கோயில் கட்டிட கலை வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரம் என்ற பெரிய கோயில் ஒன்றை உருவாக்கிய ராஜேந்திர சோழன், சோழகங்கம் என்ற பெரிய ஏரியையும் அங்கு உருவாக்கினான். ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து 185 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம், தற்போதைய அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாக விளங்குகிறது.

ஆனாலும் 1,000 ஆண்டுகளுக்கு முன் அங்கு ராஜேந்திர சோழன் உருவாக்கிய பெரிய கோயில் அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூட்டப்பட்ட 1,000வது ஆண்டு இது. 1985ம் ஆண்டில் ராஜராஜ சோழன் முடிசூடிய 1,000வது ஆண்டு விழாவை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமராக இருந்த இந்திரா காந்தி முன்னிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் அரசு விழாவாக கொண்டாடினார்.

அதே போல ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா 2014 ஜூலை 25ம் தேதி திருவாதிரை நாளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்றும், அவ்விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் எனவும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us