தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற முடியாமல் தவிப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற முடியாமல் தவிப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற முடியாமல் தவிப்பு


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினரின் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படித்தால் ரூ.ஆயிரமும், தேர்ச்சி பெற்றால் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. கல்லூரி சென்றால் ரூ.1500 முதல் 6 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.

திண்டுக்கல் மண்டல மாஸ் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினரின் பள்ளிக் குழந்தைகளுக்கு 30.9.13க்கு பிறகு கல்விக்கான நிதி உதவி உள்ளிட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. புதிய விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அட்டையை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலன் கருதி தேவையான நலத்திட்டங்களை முறையாக வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us