தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இட வசதியில்லாததால் மாணவர்கள் மரத்தடி கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் அவலநிலை

இட வசதியில்லாததால் மாணவர்கள் மரத்தடி கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் அவலநிலை

இட வசதியில்லாததால் மாணவர்கள் மரத்தடி கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் அவலநிலை


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், நரிகட்டியூர் துவக்கப் பள்ளியில் இட வசதியில்லாததால், மாணவ, மாணவியர்  மரத்தடி கோவில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. இதை கண்டித்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட நரிகட்டியூரில், யூனியன் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. தமிழ் வழி கல்விக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஆங்கில வழி கல்விக்கு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளும் உள்ளன. கடந்த, 2002ல் பள்ளியில் ஐந்து குழந்தைகள் மட்டும் படித்ததால், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

2002 ஜூன், 18 தேதி, பள்ளியில் தலைமை ஆசிரியையாக விஜயலலிதா பதவி ஏற்றார். அதற்கு பிறகு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கத் துவங்கியது. தலைமை ஆசிரியை சொந்த செலவில் பள்ளியை மேம்படுத்தியதால், கடந்த ஆண்டில் 43 மாணவர்கள், 39 மாணவியர் சேர்ந்தனர்.

பள்ளியின் செயல்பாடு திருப்தியாக உள்ளதால், நரிகட்டியூர், தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்வர்கள், குழந்தைகளை அதிகளவில் சேர்க்கத் துவங்கினர். நடப்பாண்டு இதுவரை, 104 குழந்தைகள் புதிதாக சேர்ந்ததால், பள்ளியில் குழந்தைகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது.

ஆங்கில வழியில் படிக்க சேர்ந்த மாணவ, மாணவியர், இரண்டு வகுப்பறையிலும், தமிழ் வழியில் படிக்க சேர்ந்த மாணவியர், நான்கு வகுப்பறையிலும் கல்வி கற்கின்றனர். மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் , பள்ளி அருகில் உள்ள வேப்பமரத்தடியிலும், விநாயகர் கோவில் வளாகத்திலும் உட்கார்ந்து கல்வி கற்கின்றனர். பள்ளியில், ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். இதில், ஆசிரியை சுதி என்பவரை மாற்று பணிக்கு செல்லுமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், பள்ளி கிராம கல்வி குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், நேற்று காலை 10 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டனர்.
கிராம கல்வி குழு உறுப்பினர்கள் கூறியதாவது: கரூர் நகராட்சி விரிவாக்கம் செய்வதற்கு முன், தான்தோணி யூனியன், சணபிரட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட நரிகட்டியூரில், துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. கடந்த, 1959ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1962ல் பள்ளி துவங்கப்பட்டது.

கடந்த, 2002ல் துவக்கப்பள்ளியில், ஐந்து குழந்தைகள் மட்டும் படித்தனர். பள்ளி மூடப்படும் சூழ்நிலை உருவானது. பள்ளி தலைமை ஆசிரியை விஜயலலிதா வந்த பின், மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது 217 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த போதிலும், கட்டிட வசதி போதுமானதாக இல்லை. மரத்துக்கு அடியிலும், கோவில் வளாகத்திலும் உட்கார்ந்து மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நாடக மேடையில் அமர்ந்து, மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.

கடந்த ஆண்டு கட்டிடம் கட்ட 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அருகில் உள்ள தளத்தை இடித்து, கட்டிடம் கட்டுவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நிதி வேறு பள்ளிக்கு சென்று விட்டது. தற்போதுள்ள பள்ளியில், மேல்தளம் கட்டினால், மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

பள்ளியில், ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். தற்போதுள்ள வகுப்புகளுக்கு போதுமானதாக உள்ளது. இந்நிலையில், ஒரு ஆசிரியை, வேறு இடத்துக்கு பணிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர கோரி, முற்றுகையிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை ஆசிரியை விஜயலலிதா கூறுகையில், "கட்டிட வசதி செய்ய வேண்டும், என்று கல்வித்துறையிடம் கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெறப்பட்டால் இடவசதி செய்யப்படும்" என்றார்.

கரூர் நகராட்சியில், சில அரசு பள்ளிகள், பல லட்சம் செலவிட்டு, கண்ணாடி போன்றவை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தும், கட்டிட வசதி செய்து தராமல் உள்ள கல்வித்துறை மீது பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us