தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/“தஞ்சை தமிழ்ப் பல்கலை வளர்ச்சியில், தினமலர் நாளிதழின் பங்கு அளவிட முடியாதது"

“தஞ்சை தமிழ்ப் பல்கலை வளர்ச்சியில், தினமலர் நாளிதழின் பங்கு அளவிட முடியாதது"

“தஞ்சை தமிழ்ப் பல்கலை வளர்ச்சியில், தினமலர் நாளிதழின் பங்கு அளவிட முடியாதது"


UPDATED : ஜன 05, 2015 12:00 AM

ADDED : ஜன 05, 2015 01:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2015 12:00 AM ADDED : ஜன 05, 2015 01:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: “தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், தினமலர் நாளிதழின் பங்கு அளவிட முடியாதது" என, பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற, தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25ம் ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கத்தின் நிறைவு விழா நடந்தது.

முக்கிய ஆதாரம்: இதில், தென்னிந்திய நாணயவியல் கழகச் செயலர் முனைவர் நரசிம்மமூர்த்தி மாநாட்டு கருத்துரையாற்றினார். முன்னதாக, நாணயவியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை, மும்பையைச் சேர்ந்த தோக்டே, ரிசர்வ் வங்கி அதிகாரி ராதாகிருஷ்ணன், சங்கர நாராயணன் உட்பட பலர் சமர்ப்பித்தனர்.

கருத்தரங்கு விழா நிறைவாக, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ்ராம் பேசியதாவது: தென்னிந்தியாவில், அரசியல் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், பண்டைய கால வரலாறு பற்றிய ஆய்வுகள் உருவாக்கப்படவில்லை. மேலும், தென்னிந்திய வரலாற்றை மீட்டு எடுப்பதில், நாணயங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.

சங்க கால அரசியல் அமைப்பு நடவடிக்கையை, நாணயங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பேரரசுகளின் அதிகார அடையாளமாக நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, சுப்பிரமணியன் துணைவேந்தராக இருந்த காலத்திலிருந்து, தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, இப்பல்கலைக்கழக வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு உள்ளார்.

அவரை தலைவராகக் கொண்ட, தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் முதல் ஆண்டு விழா, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்தான் நடந்தது; வெள்ளி விழாவும், இதே பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. இங்கு, திட்டக்குழு உறுப்பினராக அவர் செயல்படத் துவங்கிய, ஆறு மாதத்தில், பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தை, தினமலர் நாளிதழில் இலவசமாக வெளியிட்டு, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெரும் உதவி செய்தார். இதனால், தினமலர் நாளிதழுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாத பந்தம்.

அக்கறை: மேலும், தொலைதுார கல்விக்கு, இலவசமாக விளம்பரம் செய்ய தயாராக இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியின் அக்கறையில், தினமலர் நாளிதழின் பங்கு அளவிட முடியாதது. இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி, அப்பல்லோ மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ராஜா ரெட்டி உட்பட நாணயவியல் கழக நிர்வாகிகள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர். கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் அதியமான் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us