தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தஞ்சை தமிழ் பல்கலையுடன் நெருங்கிய தொடர்பும், நட்பும் உண்டு: தினமலர் ஆசிரியர்

தஞ்சை தமிழ் பல்கலையுடன் நெருங்கிய தொடர்பும், நட்பும் உண்டு: தினமலர் ஆசிரியர்

தஞ்சை தமிழ் பல்கலையுடன் நெருங்கிய தொடர்பும், நட்பும் உண்டு: தினமலர் ஆசிரியர்


UPDATED : ஜன 05, 2015 12:00 AM

ADDED : ஜன 05, 2015 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2015 12:00 AM ADDED : ஜன 05, 2015 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் உண்டு என்று, பல்கலையில் நடந்த, தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கத்தில், தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கம், நேற்று முன்தினம் துவங்கியது. கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் ராசவேலு வரவேற்றார்.

தென்னிந்திய நாணவியல் கழகத் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் உண்டு. இந்த பல்கலைக்கழகத்தின், முதல் துணைவேந்தர் சுப்ரமணியனுக்கு, என் தந்தையுடன் நெருக்கமான நட்பு இருந்தது. எங்கள் ஊருக்கு அருகில், அவரது சொந்த ஊர் உள்ளது.

அதனால், எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு உண்டு. கல்வி வளர்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த தொண்டாற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில், திட்டக்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், புதிய கல்வி திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல புதிய கல்வி திட்டங்களை தொடங்கினால், பலர் பயனடைவர். நிதி நெருக்கடியால், புதிய கல்வி திட்டங்கள் மீட்சி பெற முடியவில்லை.

இப்பல்கலையின் திட்டக்குழு உறுப்பினர் என்ற முறையில், விளம்பரங்களை இலவசமாக வெளியிட காத்திருக்கிறேன். தொலைதுாரக் கல்வி ஆரம்பிக்கப்பட்டதால், பெரும் ஆதரவு கிடைத்தது. நாணயவியல் கழகத்தின், 25ம் ஆண்டு விழாவை, இங்கு நடத்த மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்த துணைவேந்தர் திருமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பேராசிரியர்கள் ராசவேலு, அதியமான், பவானி ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us