தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறைக்குள் பூச்சிகள், தவளைகள் உலா வருவதால் பள்ளிக்கு வர அஞ்சும் மாணவர்கள்

வகுப்பறைக்குள் பூச்சிகள், தவளைகள் உலா வருவதால் பள்ளிக்கு வர அஞ்சும் மாணவர்கள்

வகுப்பறைக்குள் பூச்சிகள், தவளைகள் உலா வருவதால் பள்ளிக்கு வர அஞ்சும் மாணவர்கள்


UPDATED : பிப் 04, 2015 12:00 AM

ADDED : பிப் 04, 2015 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2015 12:00 AM ADDED : பிப் 04, 2015 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாடி குப்பம்: பள்ளி வளாகத்தினுள், மண் கொட்டி மேடாக்கும் மாநகராட்சியின் நடவடிக்கையால், வகுப்பறைக்குள் பூச்சிகள், தவளைகள் உலா வருகின்றன. அதனால் பள்ளிக்கு வரவே மாணவ, மாணவியர் அஞ்சுகின்றனர்.

அம்பத்துார் மண்டலம், பாடி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி அருகில் உள்ள பாடி குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு தோண்டி எடுக்கப்படும் மண், பள்ளி வளாகத்தில் கொட்டப்படுகிறது. இதனால், பள்ளி வளாகம் மேடாகி விட்டது.

மண்ணுடன் கலந்து வரும் கரப்பான் பூச்சிகள், தவளைகள் வகுப்பறைக்குள் சர்வ சாதாரணமாக வருகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அரண்டு அடித்து வெளியே ஓடுகின்றனர். சில மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், "மண் கொட்டுவதை எங்களால் தடுக்க முடியவில்லை. இதுபோன்ற காரியங்களால் பள்ளி வளாகத்தில் எதிர்காலத்தில் மழைநீர் வழிந்தோட வசதியின்றி தேங்கி நிற்கும்" என்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முறையாக அனுமதி பெற்று, பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு இன்றிதான், பள்ளியில் மண் கொட்டுகிறோம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us