தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈவ் டீசிங் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்: தற்கொலை செய்த மாணவி

ஈவ் டீசிங் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்: தற்கொலை செய்த மாணவி

ஈவ் டீசிங் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்: தற்கொலை செய்த மாணவி


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணமலை: ஈவ் டீசிங் கொடுமையால், தனியார் பள்ளி மாணவி, பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணமலை மாவட்டம், புதுப்பாளையம் அடுத்த கீழ்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர், தாமோதரன்; விவசாய கூலித் தொழிலாளி.

இவர் மகள், ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், விடுதி அறையில், மாணவி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து, விடுதி வார்டன் அன்னம்மாள், தலைமை ஆசிரியர் மதலைமுத்து ஆகியோர் விரைந்து வந்தனர். அம்மா பேச்சை கேட்கல... தகவல் பரவியதால், பெற்றோர், பொதுமக்கள், விடுதிமுன் திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த மாணவியின் கையில் கடிதம் இருந்தது.

அதில், மாணவி எழுதியிருப்பதாவது:

அம்மா, நான் உங்கள் பேச்சை கேட்கவில்லை; மன்னித்து விடுங்கள். உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. தங்கையை நன்றாக படிக்க வையுங்கள். ஆண்களோடு சேர்ந்து படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டாம்; எந்த விடுதியிலும் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால், பெண்கள் விடுதியில் மட்டும் சேர்க்கவும். என்னை கலாய்த்தவர்கள், நன்றாக இருக்க மாட்டார்கள்; அவர்கள் நன்றாக இருந்தாலும் நான் சும்மா விட மாட்டேன். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளியில் நடந்த ஈவ் டீசிங் காரணமாகவே, மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகம் அலட்சியம்?

பள்ளியில், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கட்டண வசூலில் அக்கறை காட்டும் பள்ளி நிர்வாகம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில், கோட்டை விட்டுவிட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஈவ் டீசிங் செய்யும் மாணவர்கள் பற்றி, வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மதலைமுத்து கவனத்துக்கு, பலமுறை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போதெல்லாம், கோ-எஜூகேஷன் ஸ்கூல்னா இப்படித்தான் இருக்கும் என, பொறுப்பில்லாமல் தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே மாணவி உயிரை விட நேர்ந்ததாக, மாணவியின் பெற்றோர் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us