தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட முயற்சிக்கு மேக் இன் இந்தியா திட்டம்

இளம் விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட முயற்சிக்கு மேக் இன் இந்தியா திட்டம்

இளம் விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட முயற்சிக்கு மேக் இன் இந்தியா திட்டம்


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: இளம் விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட முயற்சிக்கு வழிகாட்டுவதே மோடியின்
மேக் இன் இந்தியா திட்டம் என இதன் தேசிய பொறுப்பாளர் முருகானந்தம் கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் ஜூலை 21ல் யோகா, துாய்மை பாரதம், மகளிர் மேம்பாடு, திறன் வளர்ச்சி, மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்பு) ஆகிய தாரக மந்திரங்களை அறிவித்தார். இவற்றின் செயல்பாடுகளை புதுடில்லியில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் ஆக., 5ல் துவக்கி வைத்தனர். புதிய யோசனை, புத்தாக்கம், கண்டுபிடிப்பு ஆகியன மேக் இன் இந்தியா திட்டத்தின் சாராம்சம். 

கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களிடம் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள் குறு வட்டத்திற்குள் சுருங்க விடாமல் வெளிக்கொண்டு வந்து உலகிற்கு தெரிவிக்கும் நோக்கம் இத்திட்டம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இளம் விஞ்ஞானிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே பிரதானமாகும். இவர்களின் அரிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று தரும் பணியை மேக் இன் இந்தியா மேற்கொள்ளும்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அக்., இறுதி வாரத்தில் மாநில அளவிலான செயல் விளக்க கருத்தரங்கு திருச்சியில் நடத்த திட்டமிள்ளோம். மாணவர்களை இளம் தொழிலதிபர்களாக உருவாக்குவதை இலக்காக கொண்ட மேக் இன் இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us