தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தட்டச்சு பள்ளிகளை திறக்க கோரி வழக்கு; அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தட்டச்சு பள்ளிகளை திறக்க கோரி வழக்கு; அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தட்டச்சு பள்ளிகளை திறக்க கோரி வழக்கு; அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


UPDATED : ஆக 07, 2020 12:00 AM

ADDED : ஆக 07, 2020 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2020 12:00 AM ADDED : ஆக 07, 2020 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை;
டாஸ்மாக், ஓட்டல்கள், ஜிம்கள் செயல்பட அனுமதித்துள்ள போது, தட்டச்சு பள்ளிகளை ஏன் திறக்க அனுமதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
பொதுநல மனு

தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் செந்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: 

தமிழகத்தில், 3,500 அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகள் உள்ளன. இவை, ஊரடங்கால் மார்ச், 18லிருந்து மூடப்பட்டுள்ளன.
இவற்றில், அதிக மாணவர்கள், ஒரே நேரத்தில் பயிற்சி பெற வாய்ப்பில்லை. குறைந்த அளவு மாணவர்களே, தினமும் ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவர். ஒவ்வொரு தட்டச்சு இயந்திரத்திற்கும், 1 மீட்டர் இடைவெளி உள்ளது. இதை, மேலும் அதிகரிக்கத் தயார். இப்பள்ளிகள், 75 சதவீதம், வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. ஊரடங்கால், வருவாய் இன்றி எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பல தொழில்களுக்கு தளர்வு, தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், விதிகளை பின்பற்றி, தட்டச்சு பள்ளிகளை நடத்த தயார். தட்டச்சு பள்ளிகளை திறக்க அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், &'சில தளர்வுகளுடன், ஆக., 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது&' என தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதிகள் உத்தரவு

சமூக இடைவெளி என்கிறீர்களே... ஊரடங்கில் டாஸ்மாக் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அமைச்சர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதா? வி.ஐ.பி.,க்கள் வருகையின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? ஊரடங்கில் ஓட்டல்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 
டாஸ்மாக் கடைகள் முழுமையாக திறக்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாக கூறப்படும் அதே வேளையில், தட்டச்சு பள்ளிகள் செயல்பட தடை தொடர்வது ஏன்? இதற்கு, தலைமைச் செயலர், உயர்கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ஆக., 17ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us