தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை: பினராயி விஜயன்

நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை: பினராயி விஜயன்

நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை: பினராயி விஜயன்


UPDATED : ஆக 28, 2020 12:00 AM

ADDED : ஆக 28, 2020 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2020 12:00 AM ADDED : ஆக 28, 2020 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
நீட் தேர்வு நடத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. 
நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நேற்று கூட்டினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் &'&'நீட் தேர்வு நடத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசை தொடர்பு கொள்வில்லை.&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us