மத நம்பிக்கை வேண்டும், மத வெறி கூடாது: அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர்
மத நம்பிக்கை வேண்டும், மத வெறி கூடாது: அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர்
UPDATED : அக் 31, 2009 12:00 AM
ADDED : அக் 31, 2009 11:17 AM
அ நிறம் | அளவு
""ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை தேவை; ஆனால் மத வெறி இருக்கக் கூடாது," என்று அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் சரோஜா கூறினார். கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடந்தது. விழாவையொட்டி, கலாச்சார ஆடை வணிவகுப்பு நடந்தது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் போல் மாணவியர் மாறுவேடமணிந்து மேடையில் நடை பயின்றனர். அந்தந்த மாநில மக்கள் உண்ணும் உணவுகளை தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
இவ்விழாவில்பேசிய பல்கலை துணைவேந்தர் சரோஜா பேசுகையில், ""ஒவ்வொருவரும் பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தலாம். மத நம்பிக்கை வேண்டியதுதான்.
ஆனால் மத வெறி இருக்கக் கூடாது. அனைத்து ஆறுகளும் கடலில் போய் சேருவதைப் போல், ஆண்டவனை அடைய பல வழிகள் உண்டு. மனிதர்கள் தங்களுக்குள் ஜாதி, மத, இன வேறுபாடு பார்த்தாலும் அனைவரின் ரத்தமும் ஒரே நிறம்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்து சரிசமமாக பழக வேண்டும்,&'&' என்றார். பல்கலையில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 2,3 மற்றும் ஐந்தாம் பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஸ்ரீதேவி சிவகாமி, காயத்ரி தேவி ஆகியோர் உட்பட ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.
