தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து சமுதாய ஏழை மாணவர்களுக்கும் கல்வி கட்டண திட்டம் செயல்படுத்த கோரிக்கை

அனைத்து சமுதாய ஏழை மாணவர்களுக்கும் கல்வி கட்டண திட்டம் செயல்படுத்த கோரிக்கை

அனைத்து சமுதாய ஏழை மாணவர்களுக்கும் கல்வி கட்டண திட்டம் செயல்படுத்த கோரிக்கை


UPDATED : ஜன 03, 2021 12:00 AM

ADDED : ஜன 03, 2021 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2021 12:00 AM ADDED : ஜன 03, 2021 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்கும் அரசு திட்டம், அனைத்து சமுதாய ஏழை மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:

புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளி கல்லுாரியில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அனுமதி அளித்த கவர்னர் கிரண்பேடிக்கு நன்றி பாராட்டுகள். இத்திட்டம் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
பொருளாதார வசதியின்றி படிக்க முடியாமல் கஷ்டப்படும் ஆதிதிராவிட சமுதாய மாணவர்கள் கல்வி வசதி பெற முடியும். சமத்துவக் கல்வி என்ற கொள்கையை உண்மையாக நிலைநாட்ட, ஆதிதிராவிடர் நிலையில் உள்ள மீனவர்கள், வறுமையில் உள்ள அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கென ஒரு அதிகாரி நியமித்து, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் குறித்த நேரத்தில் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். 
புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us