ஆலிம் முஹம்மது சாலிஹ் அகாடமி ஆப் ஆர்கிடெக்சர் கல்லூரி பட்டமளிப்பு விழா
ஆலிம் முஹம்மது சாலிஹ் அகாடமி ஆப் ஆர்கிடெக்சர் கல்லூரி பட்டமளிப்பு விழா
UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 10:29 AM
சென்னை:
கல்லூரியில் நடந்த 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்களுக்கு தலா தங்கநாணயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.75 மாணவ மாணவியர்களுக்கு பி.ஆர்க் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 71 மாணவர்கள் முதல்நிலையில் தேர்ச்சிபெற்றனர். பல்கலைக்கழக தரவரிசை தேர்ச்சி பெற்ற 4 மாணவர்களுக்கு ராகவ்கிருஷ்ணன் (14வது ரேங்க்), ஹரீஷ்டி.ஆர் (23 வது ரேங்க்), ஷியாம் (28 வது ரேங்க்) மற்றும் மீனாட்சி (30 வது ரேங்க்) ஆகியோருக்கு தலா தங்க நாணயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமைவிருந்தினராக மும்பை இந்திய கட்டிடக்கலை நிறுவனத்தின் (ஐ.ஐ.ஏ.,) தலைவர் விலாஸ்அவசட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசுகையில், நமது நகரங்களை மட்டுமல்ல, நமது சமூகம் மற்றும் தேசத்தின் சாரத்தையும் வடிவமைப்பதில் கட்டிட கலைஞராக உங்கள் பங்குமுக்கியமானது. படைப்பாற்றல், பார்வை மற்றும் நிலையான வடிவமைப்பிற்கான அர்ப்பணிப்புடன் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டமைப்பு துறையில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. மேலும் உங்கள் கட்டிட வடிவமைப்பு கலை முயற்சிகள் உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் புதுமைக்கு சான்றாக இருக்கட்டும், என்றார். சிறப்பு விருந்தினராக ஐ.ஐ.ஏ., திருச்சி மையம் தலைவர் பேராசிரியர் ராஜா கலந்து கொண்டார். ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி நிறுவனங்கள் குழு தலைவர் அல்ஹாஜியானி எஸ்.எஸ் ஹஷீபா, செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எஸ். சேகுஜமாலுதீன், பேராசிரியர் அரவிந்த், இயக்குனர் மற்றும் பேராசிரியர் பால், துறைத்தலைவர் ஆலிம் முஹம்மது சாலிஹ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
