தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: தமிழ் தேர்வில் விலக்கு அளிக்க மறுப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: தமிழ் தேர்வில் விலக்கு அளிக்க மறுப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: தமிழ் தேர்வில் விலக்கு அளிக்க மறுப்பு


UPDATED : பிப் 04, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 09:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 09:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து, மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த மாதம் 7ம் தேதி நடக்க இருந்த கட்டாய தமிழ் தகுதி தேர்வு, புயல் காரணமாக இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.கட்டாய தமிழ் தகுதி தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே, பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.கட்டாய தமிழ் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கக் கோரியும், இந்த தேர்வு எழுத வகை செய்யும், அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், மொழி சிறுபான்மையினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், சிறப்பு பிளீடர் கதிரவன் ஆஜராகினர்.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.இளங்கோ ஆஜராகி, தமிழ் மொழி தெரியாதவர்கள், பணி நியமன தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் மொழி தேர்வில் தேர்ச்சி பெற, சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. அதே சலுகையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும், என்றார்.அரசு தரப்பில், சட்டத் திருத்தத்துக்கு பின், வெவ்வேறு பணிகளுக்கான மூன்று தேர்வுகள் நடந்து விட்டன. பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், கடந்த அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பரில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விட்டன. புயல், மழையால், ஜன., 7ல் இருந்து, பிப்., 4க்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
ஓராண்டுக்கு மேலாக சட்ட திருத்தம் அமலில் இருந்தும், தேர்வு அறிவிப்பு வெளியிட்ட பின்னும், நீதிமன்றத்தை நாடவில்லை. கடைசி நேரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க இயலாது. தேர்வை, 41,485 பேர் எழுதுகின்றனர்.இந்த கட்டத்தில், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிப்பது தேர்வு நடைமுறைக்கு இடையூறு செய்வதாகி விடும். மனுதாரர்களின் கோரிக்கையை, அரசு தான் பரிசீலிக்க வேண்டும். மனுதாரர்கள் தேர்வு எழுதலாம். அரசு தரப்பில், மார்ச் 7க்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை மார்ச் 11க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us