நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை நடத்த மனு
நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை நடத்த மனு
UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:58 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில், அரசு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 'நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
கவர்னர், முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரிடம், புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி அளித்துள்ள மனு:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், நர்சிங் மாணவர்கள் சேர்க்கை குறித்து, வெளியிட்ட செய்திக் குறிப்பு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் நுழைவு தேர்வு நடத்தி நர்சிங் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தனியார் நர்சிங் கல்லுாரியில் உள்ள நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா? நுழைவு தேர்வு மூலம் நடைபெறுமா? நுழைவு தேர்வு யார் நடத்துவது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பொது நுழைவு தேர்வு மூலம் தான் கலந்தாய்வு நடத்தப்படும் என்றால், 'நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்களை 'சென்டாக்' மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.
ஜிப்மர், எய்ம்ஸ், நர்சிங் கல்லுாரிகளில் 'நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அரசு இட ஒதுக்கீட்டு நர்சிங் மாணவர்கள் சேர்க்கைக்கு புதுச்சேரி பல்கலை., மூலம் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை எனில், காலதாமதத்தை ஏற்படுத்தும். இது தனியார் நர்சிங் கல்லுாரிகளுக்கு சாதகமாக மாறிவிடும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.