சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்
சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 09:15 AM

திருப்பூர்:
திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. ஆறு முதல், பிளஸ் 2 வரை, 581 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரின்ஸ்அந்தோணிஅமலன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர், இளங்கோ ஒருங்கிணைத்தார்.
ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கு தனித்தனி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதியம், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இணைந்து, சைவ பிரியாணி, கேசரி, தயிர்சாதம், முட்டை மசால், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளை தயாரித்தனர். பள்ளி வளாகத்தில் வைத்து அனைத்து வகுப்பு மாணவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மாலை வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிக்கப்பட்டது.