பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பெண்கள் கறுப்பு கொடி போராட்டம்
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பெண்கள் கறுப்பு கொடி போராட்டம்
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 11:16 AM
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகாவில் பெண்கள் கண்ணை கட்டிக்கொண்டு கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலையில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவிக்கு நீதி கேட்டும், தி.மு.க., அரசை கண்-டித்தும், பா.ஜ., பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. பொது இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காததால், அவரவர் வீடுகளில், பா.ஜ., நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று ராசிபுரம், வெண்-ணந்துார், நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் கண்களை கட்டிக்கொண்டு கறுப்புக்கொடி-யுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மட்டு-மின்றி தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கோஷமிட்டனர். முள்ளுக்குறிச்சி கிராமத்தில் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் நின்றே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முக்கியமாக, வெண்ணந்துார் ஒன்றியத்தில், பா.ஜ., தலைவர் திவ்யா அவரது அம்மா, மகள் ஆகிய மூன்று தலைமுறையை சேர்ந்த பெண்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.