அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விட்டன! வழிகாட்டி நிகழ்ச்சியில் பெற்றோர் நெகிழ்ச்சி
அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விட்டன! வழிகாட்டி நிகழ்ச்சியில் பெற்றோர் நெகிழ்ச்சி
UPDATED : மார் 28, 2025 12:00 AM
ADDED : மார் 28, 2025 07:27 AM

கோவை:
தினமலர் நாளிதழ் நடத்தும், வழிகாட்டி நிகழ்ச்சி, தங்கள் பிள்ளைகள் சரியான படிப்புகளை தேர்வு செய்ய பயனுள்ளதாக இருப்பதாக, பெற்றோர் பலர் தெரிவித்தனர்.
பயனுள்ள தகவல்கள்
சித்ரா,திருப்பூர்:
இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விட்டன. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தோம். அதுகுறித்து அறிந்து கொள்ள முடிந்தது.
விரிவான கருத்துக்கள்
ரவிச்சந்திரன்,பொள்ளாச்சி:
அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. எங்களுக்கு தேவையான தகவல்கள், ஒரே இடத்தில் கிடைத்தன. ஒவ்வொரு பாடம் குறித்தும், விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. மிஸ் பண்ணக்கூடாத நிகழ்ச்சி இது.
பயனுள்ள தகவல்கள்
நிரஞ்சனா, கோவை:
மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக கல்லுாரிகள் குறித்த தகவல்கள், ஒரே இடத்தில் கிடைத்தன. போட்டித்தேர்வுகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, இன்றைய தொழில்நுட்பங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது.
தெளிவு கிடைத்தது
ரிஷி பிரணவ்,பீளமேடு:
இன்ஜினியரிங் படிப்பு தகவல்கள் அறிய நிகழ்வில் பங்கேற்றேன். பல்வேறு புதிய துறைகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். ஏ.ஐ., குறித்து தெளிவாக புரிந்து கொண்டேன். இங்கு கிடைத்த தகவல்களை கொண்டு, எனது தேர்வை மேற்கொள்ளவுள்ளேன்.
திட்டமிட்டு செயல்படுவேன்
கோகுல்கிருஷ்ணன், மலுமிச்சம்பட்டி:
பிளஸ்2 பிரிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படித்துள்ளேன். அரசு தேர்வுகள் குறித்து பல்வேறு தகவல்களை, இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது. கல்லுாரி துவங்கியது முதல் திறன் வளர்ப்பு, போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது குறித்து, திட்டமிட்டு செயல்படவுள்ளேன்.
பரிசு வென்றவர்கள்!
வழிகாட்டி நிகழ்ச்சியின் மாலை அமர்வில், சிறப்பாக பதில் அளித்து, டேப்பை பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்தா, ஸ்மார்ட் வாட்சுகளை, கோவையை சேர்ந்த மாதேஷ்சரண், ஜீவன், சஞ்சய், கார்த்திகா, ஆகாஸ் ஆகியோர் வென்றனர்.