ஆர்ஐஎம்சி நுழைவுத் தேர்வு முடிவு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
ஆர்ஐஎம்சி நுழைவுத் தேர்வு முடிவு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி (ஆர்ஐஎம்சி)- டேராடூனில் 2026 ஜனவரிக்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதி எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது.
ஆர்ஐஎம்சி இணையதளம் பராமரிப்பு காரணமாக தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது. எனவே, அந்தத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஆர்ஐஎம்சி டேராடூனிலிருந்து பெறப்பட்ட தேர்வு முடிவுகள், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.