புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கம் - நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கம் - நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : டிச 05, 2025 06:12 PM
ADDED : டிச 05, 2025 06:14 PM

சென்னை:
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், புதிய பாடப்புத்தக பணிகளில் பங்கேற்க தன்னார்வ நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட பாடத்தில் தேவையான கல்வித் தகுதியும், கற்பித்தல் அனுபவமும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவம், பாடப்புத்தகம் உருவாக்க பணிகளில் முந்தைய பங்களிப்பு, மற்றும் சமர்ப்பிக்கப்படும் பாடவரைவு மாதிரி ஆகியவை ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்யப்பட்டு நிபுணர்கள் தேர்வு செய்யப்படுவர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அடுத்தடுத்த பணிகள் குறித்த தகவல் வழங்கப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் பாடவாரியான தலைப்புகளில் மாதிரிப் பாட தயாரித்து டிச.,20க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் தலைப்புகள் தொடர்பான விவரங்களை https://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

