பெண் ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பை உயர்த்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பெண் ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பை உயர்த்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
UPDATED : டிச 20, 2025 09:02 AM
ADDED : டிச 20, 2025 09:03 AM

கரூர்:
பெண் ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பை, 12 நாட்களிலிருந்து, 24 நாட்களாக தமிழக அரசு உயர்த்தி வழங்கி வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட் அறிக்கை:
தமிழ்நாட்டில், பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டின் சராசரியை காட்டிலும் அதிகமாக, 43 சதவீத பெண்கள் உற்பத்தி துறையில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பிற்கான கோரிக்கை எழுகிறது.
இந்த நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு மிகவும் சங்கடமான நிலை. பல பெண்கள் சொல்ல முடியாத வலிகளுடன, சிரமத்-துடன் வீட்டு பணிகளையும் செய்து விட்டு வந்து, அலுவலக பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்தாண்டு, கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பு, அம்மாநில அரசால் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்-நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு, மாதவிடாய் சிறப்பு விடுப்பு என்று இல்லாமல், தற்செயல் விடுப்பு, 12 நாட்களாக உள்ளதை அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 24 நாட்களாக உயர்த்தி வழங்கி வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
