மூளையை தின்று தீர்க்கும் ஸ்மார்ட்போன்! நீங்க தப்பிக்க விரும்பினால் இதை படிங்க!
மூளையை தின்று தீர்க்கும் ஸ்மார்ட்போன்! நீங்க தப்பிக்க விரும்பினால் இதை படிங்க!
UPDATED : மார் 27, 2026 01:34 PM
ADDED : மார் 27, 2026 01:37 PM
நவீன உலகில் காலையில் கண் விழிப்பதில் இருந்து, இரவு உறங்கும் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நொடி கூட நகர மறுக்கிறது வாழ்க்கை.
'ஸ்மார்ட்' உலகிற்கு பழகிவிட்டோம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இந்த அதீத போன் பயன்பாடு நமது மூளை செயல்பாட்டையே மெல்ல மெல்ல மாற்றி வருகிறது என்ற அதிர்ச்சி தரும் உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிக நேரம் போன் பார்ப்பதால் கவனம் சிதறுகிறது, நினைவாற்றல் குறைகிறது, முடிவெடுக்கும் திறன் மங்குகிறது, என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது வெறும் பயமுறுத்தல் அல்ல... உங்கள் மூளைக்குள் நடக்கும் நிஜமான மாற்றம்!
மகிழ்ச்சி பூதம்!
நீங்கள் ஒவ்வொரு முறை போனை 'அன்லாக்' செய்யும் போதும், அல்லது சோஷியல் மீடியாவில் ஒரு 'லைக்' வரும் போதும், உங்கள் மூளையில் 'டோபமைன்' என்ற ரசாயனம் சுரக்கிறது. இது தற்காலிக மகிழ்ச்சியை தரும்.
இதனால் என்ன ஆபத்து?
மூளை இந்த தற்காலிக மகிழ்ச்சிக்கு அடிமையாகிறது. அடிக்கடி போன் பார்க்கும் பழக்கம் 'அடிமைத்தனமாக' மாறுகிறது. நிஜ வாழ்க்கையை விட டிஜிட்டல் உலகிலேயே வாழ தோன்றுகிறது.
சிதறும் சிந்தை!
நமது மூளையின் Prefrontal Cortex என்ற பகுதி தான் கவனம், முடிவெடுத்தல், மற்றும் சுயக்கட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். அதீத போன் பயன்பாட்டால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதன் விளைவுகள்
தொடர்ச்சியான கவனச்சிதறல் உங்களை எதிலும் முழுமையாக கவனம் செலுத்த விடாமல் தடுப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் குறைத்து விடுகிறது. இதனால் எதையும் மேலோட்டமாக மட்டுமே யோசிக்கும் நிலை ஏற்பட்டு, காலப்போக்கில் உங்கள் நினைவாற்றலையும் அது பாதிக்கிறது. இதன் விளைவாக, மிகச் சிறிய அன்றாட விஷயங்களைக் கூட எளிதில் மறந்துவிடும் சூழல் உருவாகிறது.
'ரீல்ஸ்' vs 'ஸ்டடிஸ்' - குழப்பம்!
மூளை எப்போதும் உடனடி மகிழ்ச்சியை (இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், சோஷியல் மீடியா) விரும்புகிறது. நீண்டகால இலக்குகளை (படிப்பு, வேலை, தூக்கம்) தள்ளி போடுகிறது. போனை கையில் எடுத்தால் மூளை தவறான தேர்வையே செய்ய தூண்டுகிறது. இன்னும் 5 நிமிடம் என்று ஆரம்பித்து, மணிக்கணக்காக போனை பார்ப்பது இதனால் தான்!
புளூ லைட் ஆபத்து மற்றும் தீர்வு!
போன் திரைகளில் இருந்து வரும் புளூ லைட் தூக்கத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், நினைவக பகுதியான 'Hippocampus' மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பதற்றம் மற்றும் மறதியை அதிகரிக்கிறது.
மீட்கும் மந்திரம்: 4 வார “மூளை ரீசெட்” திட்டம்!
கவலைப்படாதீங்க! இழந்த கவனத்தை மீண்டும் பெற முடியும். அதற்கு இந்த திட்டத்தை பின்பற்றுங்க.
வாரம் 1 - 2 (கவனித்தல்):
நீங்கள் எப்போது, ஏன் போன் எடுக்கிறீர்கள்? (சலிப்பு / அழுத்தம்) என்பதை கவனியுங்கள்.
வாரம் 3 - 4 (சிறு மாற்றங்கள்):
காலை எழுந்தவுடன் 1 மணி நேரம் போன் தொடாதீர்கள்! இரவில் போனை வேறு அறையில் வையுங்கள். போன் எடுக்கணும் போல இருந்தால், நடைப்பயிற்சி அல்லது மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
இது குறித்து நிபுணர்கள் கூறியதாவது, “தேவையில்லாத நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இது மூளையை செயல்பட வைக்கும் இயற்கையான மருந்து.” என்கின்றனர்.
பஞ்ச்!
“போன் பிரச்னை இல்லை…
அதை பயன்படுத்தும் முறை தான் பிரச்னை!”
மூளைக்கு மாறும் தன்மை உண்டு.
சரியான பயிற்சியால் இழந்த கவனம், கட்டுப்பாட்டை மீண்டும் உருவாக்கலாம்.
இன்றே இப்போதே தொடங்குங்க!

