தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பர பதாகை
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பர பதாகை
UPDATED : ஏப் 04, 2026 03:57 PM
ADDED : ஏப் 04, 2026 04:04 PM
கீழக்கரை:
கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பாலையரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விளம்பர பதாகைகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ளன.
இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளன. இங்கு வரக்கூடிய கல்வி ஆண்டிற்காக மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பது குறித்த அரசின் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் பெற்றோரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைடெக் லேப் வசதி, காலை மற்றும் மதிய உணவு திட்டம், வினாடி-வினா போட்டிகள், சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத் திருவிழா, மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா, இல்லம் தேடி கல்வித் திட்டம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனிச்சிறப்பு மையம், யோகா, சிலம்பம் மற்றும் மாணவர்களுக்கான தினமலர் பட்டம், தேன் சிட்டு உள்ளிட்ட இதழ்கள் வழங்கல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற அர்ஷா மற்றும் ரீமா சக்தி ஆகியோரின் போட்டோக்களும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், தனியார் பள்ளிக்கு நிகராக இங்கு பல்வேறு சிறப்பம்சங்களுடன் செயல்பாடுகள் உள்ளன. இதனால் திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் இங்கு கல்வி பயில்வதற்காக வருகின்றனர் என்றனர்.
