sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஏப் 17, 2026 07:35 PM

ADDED : ஏப் 17, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 07:35 PM ADDED : ஏப் 17, 2026 07:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைத்திட நவீன பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் 28 இடங்களில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டு செய்திக்குறிப்பு:



கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைத்திடும் வகையில் விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவு ஆகியவற்றுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் கடந்த 15ம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள 9, 7, 8, 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடைசி நாள் மே 3ம் தேதி மாலை 06:00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய மொபைல் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இதில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் ஆண்களுக்கும் வரும் மே 7ம் தேதியும், பெண்களுக்கும் மே 8ம் தேதியும் போட்டிகள் நடத்தப்படும். தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கள், திருச்சி அன்னை விளையாட்டரங்கள், சென்னை வேளச்சேரி ஏஜிபி காம்ப்ளக்ஸ், கடலுார். கிருஷ்ணகிரி, விழுப்புரம், துாத்துக்குடி ஆகிய மாவட்ட விளையாட்டரங்கங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us