sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் நுழைவு தேர்வு நாளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தடை

நீட் நுழைவு தேர்வு நாளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தடை

நீட் நுழைவு தேர்வு நாளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தடை


UPDATED : ஏப் 29, 2026 09:46 AM

ADDED : ஏப் 29, 2026 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 09:46 AM ADDED : ஏப் 29, 2026 09:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'நீட் தேர்வு நடக்கும் மே 3ம் தேதியும், அதற்கு முந்தைய நாளும், மருத்துவ மாணவர்களுக்கு அவசிய தேவையின்றி, விடுமுறை வழங்க வேண்டாம்' என, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதில், 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

கடந்த, 2024ல் நடந்த நீட் தேர்வின் போது, மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர், உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அவ்வறான குற்றச்சாட்டில், பீஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்டில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஏற்கனவே மருத்துவ இடங்கள் பெற்றவர்கள், மீண்டும் நீட் தேர்வு எழுதி, கலந்தாய்வில் வேறு கல்லுாரிகளில் இடங்கள் பெறுவதாகவும் கண்டறியப்பட்டது.

இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “மே 2, 3ம் தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம். அத்தியாவசியக் காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம்” என, அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us