தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு


UPDATED : ஏப் 30, 2026 05:13 PM

ADDED : ஏப் 30, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 05:13 PM ADDED : ஏப் 30, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:
கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொழில் நுட்பக் கல்வி வழங்குவதில், 43 வருடங்களாக முன்னோடியாய் விளங்குகிறது. சென்னை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நவீன உபகரணங்கள் அடங்கிய ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி வகுப்புகள்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும், டாப் 5 சதவீதம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில், 25 சதவீதம் வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு கல்லுாரி வளாகத்திலேயே தனித்தனி விடுதி வசதி உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வேலைக்கு செல்ல விருப்பமுள்ள அனைவருக்கும் கல்லுாரி வேலை வாய்ப்புத்துறை மூலம், இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனங்களில், 100 சதவீம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு வருமானம் குறைந்தபட்சம், ரூ.2.22 லட்சமாகவும், அதிகபட்சம் ரூ.3.80 லட்சம் பெற்று தரப்பட்டுள்ளது.

விளையாட்டில், மாநில மற்றும் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 375 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 50 சதவீதம் வரை பருவ கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. 2025-26ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.43.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us