கிருஷ்ணகிரி செந்தில் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
கிருஷ்ணகிரி செந்தில் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
UPDATED : மே 23, 2026 03:29 PM
ADDED : மே 23, 2026 03:30 PM
கிருஷ்ணகிரி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கிருஷ்ணகிரி செந்தில் பதின்ம பள்ளி மாணவ, மாணவியர் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி செந்தில் பதின்ம பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சவுஜன்யா, 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும், பள்ளி அளவில் வீரராகவன், 500க்கு, 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், சனா மற்றும் சுஜன், 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 495 மதிப்பெண்களுக்கு மேல், 2 மாணவர்கள், 490 மதிப்பெண்களுக்கு மேல், 5 மாணவர்கள், 480க்கு மேல், 13 பேர், 470க்கு மேல், 15 பேர், 450க்கு மேல், 16 பேர், 400க்கு மேல், 38 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 100க்கு, 100 பெற்றவர்கள் ஆங்கில பாடத்தில் ஒரு மாணவரும், கணிதத்தில் ஒரு மாணவரும், அறிவியலில், 10 மாணவர்களும், சமூக அறிவியலில், 3 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் வேதகுமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவகாமி, கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.
