sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்


UPDATED : மே 24, 2026 12:40 PM

ADDED : மே 24, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 12:40 PM ADDED : மே 24, 2026 12:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
'உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையை பயன்படுத்தி, சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி, மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:



தமிழக முதல்வர் உத்தரவுப்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2026ம் ஆண்டுக்கான உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில், பெற்றோர் இல்லாத மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், உயர்கல்விக்கு செல்ல பயப்படும் மாணவர்கள், கல்லுாரி கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள்.

உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உயர்கல்வியை தொடர இயலாத மாணவர்கள், பெற்றோர் விருப்பமின்மையால் உயர்கல்வியை தொடர இயலாத மாணவர்கள், சமூக காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள்.

சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்கள், குடும்ப சுழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்கள் என, பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழிற்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., கல்லுாரிகளின் காலிப்பணியிடங்கள் சார்ந்த விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை மூலமாக வழங்கப்படும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில், சேர்க்கை மேற்கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 5994286, வாட்ஸ் அப் எண்: 97888 58794ல் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us