sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெட் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

டெட் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

டெட் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


UPDATED : மே 30, 2026 10:21 AM

ADDED : மே 30, 2026 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 10:21 AM ADDED : மே 30, 2026 10:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாக நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.

'பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கு அல்லது பதவி உயர்வு பெறுவதற்கு, 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்து இருந்தது.

அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணிபுரிய தகுதித் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேர்வு எழுத விருப்பமில்லை என்றால் தாராளமாக அவர்கள் ஆசிரியர் வேலையை விட்டு வெளியேறலாம் என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தனர். தேவைப்பட்டால் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாய்ப்பு வழங்கினர்.

மேலும் அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை சம்பந்தப்பட்ட அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் ஆசிரியர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எழுப்பியது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போதைய தி.மு.க., அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பல ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சீராய்வு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் முந்தைய தீர்ப்பில் சில மாற்றங்களை நீதிபதிகள் மேற்கொண்டனர்.

குறிப்பாக ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள், 'டெட்' தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும் என்பதில் மாற்றம் செய்து, அதை மூன்று ஆண்டுகளாக நீட்டித்து தீர்ப்பு வழங்கினர்.

மேலும், 2028, ஆகஸ்ட் 31க்குள், 'டெட்' தேர்வை நடத்த வேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us