தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐநா விருது பெற்ற மேஜர் அபிலாஷா பராக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஐநா விருது பெற்ற மேஜர் அபிலாஷா பராக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஐநா விருது பெற்ற மேஜர் அபிலாஷா பராக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து


UPDATED : ஜூன் 09, 2026 09:41 AM

ADDED : ஜூன் 09, 2026 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 09:41 AM ADDED : ஜூன் 09, 2026 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஐநா சபையின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த ராணுவப் பாலின சமத்துவப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்ட மேஜர் அபிலாஷா பராக்கிற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவு:

ஆண்டின் சிறந்த ஐநா ராணுவப் பாலின சமத்துவப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்ட மேஜர் அபிலாஷா பராக்கிற்கு வாழ்த்துகள். மேஜர் பராக், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப் படையில் ஒருங்கிணைப்புக் குழுத் தளபதியாகவும், பாலின சமத்துவ ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த கௌரவம், அவரது முன்மாதிரியான சேவைக்கும், ஐநா அமைதிகாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா நீண்ட காலமாக ஆற்றிவரும் பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும். அவரது இந்தச் சாதனை, தேசத்திற்கும் மனிதகுலத்திற்கும் சேவை செய்ய விரும்பும் எண்ணற்ற இளம் இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது மகள்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us