தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி


UPDATED : ஜூன் 15, 2026 10:35 AM

ADDED : ஜூன் 15, 2026 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 10:35 AM ADDED : ஜூன் 15, 2026 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதன் காரணமாக மே 3ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு ஜூன் 21 அன்று மீண்டும் நடைபெறும். நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்து, தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த மறுதேர்வு நேர்மையாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்படும்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, மாணவர்களுக்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us