தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


UPDATED : ஜூன் 15, 2026 10:38 AM

ADDED : ஜூன் 15, 2026 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 10:38 AM ADDED : ஜூன் 15, 2026 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஜூன் 21ல் நடக்கும் இளநிலை நீட் தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது. இதனால் தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அனைவரும் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்வை எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்த ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பகல் 02:00 மணி முதல் மாலை 05:15 மணி வரை தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளால் தேர்வெழுத்துவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வினாத்தாள் புத்தகத்தில் 'தோராயக் கணக்கீடு' செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us