ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
UPDATED : ஜூன் 15, 2026 06:06 PM
ADDED : ஜூன் 15, 2026 06:08 PM
கோவை:
ஆசிய - பசிபிக் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கிடையே நட்பு, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த, 1989ம் ஆண்டு முதல் ஜப்பானில் ஆசிய - பசிபிக் குழந்தைகள் மாநாடு நடத்தப்படுகிறது. உலக குடிமகன் எனும் எண்ணத்தை இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு உருவாக்குவதே மாநாட்டின் நோக்கம்.
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜூனியர் துாதுவராக கோவை மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவி வனிஷா, ஜப்பானின் புகோக்கா நகரில் ஜூலை 11 முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் கலந்துரையாடுதல், பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெறுவது, ஜப்பானிய குடும்பங்களுடன் தங்கி அந்நாட்டு வாழ்க்கை முறையை அறிந்து கொள்வது உள்ளிட்ட அனுபவங்களைப் பெறுகின்றனர்.
மேலும், தங்கள் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளை உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
