தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் மாணவர் பயிற்சி மையத்தை இடம் மாற்றம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு

மாற்றுத்திறன் மாணவர் பயிற்சி மையத்தை இடம் மாற்றம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு

மாற்றுத்திறன் மாணவர் பயிற்சி மையத்தை இடம் மாற்றம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு


UPDATED : ஜூன் 26, 2026 04:02 PM

ADDED : ஜூன் 26, 2026 04:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 04:02 PM ADDED : ஜூன் 26, 2026 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பெரியமேடில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான முன் ஆயத்த பயிற்சி மையத்தை, சூளை பகுதிக்கு மாற்ற , பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான முன் ஆயத்த பயிற்சி மையம், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இதில், ஏராளமான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பேச்சுத்திறன், பிசியோதெரபி உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த மைய கட்டடம், மிகவும் சிதிலமடைந்ததால் அவற்றை இடித்து, புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து சில கி.மீ., தொலைவில் சூளையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கும் பள்ளி வளாகத்தில், ஒரு அறையை ஒதுக்கீடு செய்யாமல், சில கி.மீ., துாரம் தள்ளி உள்ள பள்ளிக்கு மாற்றுவது மாணவர்களை அலைக்கழிக்கும் செயல் என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். அந்த நடுநிலை பள்ளியும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாடியில் இடம் ஒதுக்குவதால், அவர்களால் படிகளில் செல்வதில் சிரமம் ஏற்படும்.

இந்த விவகாரம் தொடர்பாக, சில நாட்களுக்கு முன் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், 'சம்பந்தப்பட்ட மையத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஆனால், இது வரை எந்தவித ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:


பெரியமேடு உட்பட அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களை, பெரும்பாலான பெற்றோர், கைகளில் துாக்கிக் கொண்டு பயிற்சி மையத்துக்கு வருகின்றனர். பழைய கட்டடத்தை இடிப்பதால், 10 கி.மீ., துாரமுள்ள சூளை பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்துகின்றனர்.

மாற்றுத்திறன் மாணவர்களை அலைக்கழிக்காமல், ஏற்கனவே இயங்கும் பள்ளி வளாகத்திலேயே ஒரு வகுப்பறையை ஒதுக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us