தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பல்கலை சட்ட மசோதா கல்வியை வணிகமயமாக்காது: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

தனியார் பல்கலை சட்ட மசோதா கல்வியை வணிகமயமாக்காது: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

தனியார் பல்கலை சட்ட மசோதா கல்வியை வணிகமயமாக்காது: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி


UPDATED : செப் 21, 2026 10:12 PM

ADDED : செப் 21, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 10:12 PM ADDED : செப் 21, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
“தனியார் பல்கலை சட்ட மசோதா, கல்வியை வணிகமயமாக்காது மற்றும் தனியார் மயமாக்காது,” என, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், 'ஸ்டடி இன் கொரியா - 2026' கல்வி கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியை, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.

அதன் பின், அவர் அளித்த பேட்டி:


தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலை சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தனியார் பல்கலை மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் வாபஸ் பெறப்பட்டது. அந்த மசோதா, ஏற்கனவே உள்ள தனியார் கல்லுாரிகளை, பல்கலையாக விரிவாக்கம் செய்ய வழிவகுத்தது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் பல்கலை மசோதா, புதிய இடத்தில், புதிய தனியார் பல்கலை உருவாக வழிவகுக்கும்.

இந்த மசோதா, கல்வியை வணிகமயமாக்கும் என, கம்யூ., கட்சிகள் மற்றும் பா.ம.க., அச்சம் தெரிவித்துள்ளன; அது சரியல்ல. இந்த மசோதா கல்வியை வணிகமயமாக்காது மற்றும் தனியார் மயமாக்காது. இதை, அவர்கள் நம்ப வேண்டும். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற, அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த பல்கலைகள், தமிழகத்தில் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

நம் மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதை விட, நம் மாநிலத்திலேயே படிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தனியார் பல்கலை மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், பல்கலையின் உள்கட்டமைப்பு, கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us