தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி புத்தக விவகாரம்; யாரையும் சும்மா விடப்போவதில்லை: அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

போலி புத்தக விவகாரம்; யாரையும் சும்மா விடப்போவதில்லை: அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

போலி புத்தக விவகாரம்; யாரையும் சும்மா விடப்போவதில்லை: அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்


UPDATED : நவ 18, 2026 07:40 PM

ADDED : நவ 18, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:40 PM ADDED : நவ 18, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டில்லியில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை; நூலக புத்தகக் கொள்முதலில் ஊழல் நடந்தது தி.மு.க., ஆட்சியில் தான்; ஈ.வெ.ரா., நூலகம் மட்டுமல்லாது பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளது.

போலி புத்தக கொள்முதல் விவகாரத்தில் யாரையும் சும்மா விடமாட்டோம். கன்னிமாரா நூலகத்தில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நானே பறிமுதல் செய்தேன்; இது போன்ற ஊழல் எந்த மாநிலத்திலும் இனி நடைபெறக் கூடாது என்பதற்காக பறிமுதல் செய்யப்பட்ட குப்பை புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம்.

நூலகங்களில் ஆங்கில நூல்களை இன்னும் ஆய்வு செய்யவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கூட நூலக கட்டுமானங்களில் தான் ஊழல் நடந்து இருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக புத்தக கொள்முதலில் ஊழல். அரசியல் தலையீடு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

புத்தகங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம். தற்பொழுது உள்ள விஷ கிருமிகளை அகற்றிவிட்டு புதிய முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்வோம்.

நாங்கள் கொள்முதல் செய்தால் இப்படியான குப்பை புத்தகங்களை கொள்முதல் செய்யவே மாட்டோம்.

நூலகங்களுக்கு போலி நூல் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து கவிஞரான தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசாதது ஏன்? நீதிமன்றம் தலையிட்டதால் தான் தி.மு.க., ஆட்சியில் புத்தக கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டது. விஜய் பெயர் போட்ட பல புத்தகங்களை தி.மு.க., ஆட்சியாளர்கள் தான் கொள்முதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போலி புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us