தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஞ்ஞானி என்பவர் ஒரு உலக சொத்து: நோபல் அறிஞர் வி. ராமகிருஷ்ணன்

விஞ்ஞானி என்பவர் ஒரு உலக சொத்து: நோபல் அறிஞர் வி. ராமகிருஷ்ணன்

விஞ்ஞானி என்பவர் ஒரு உலக சொத்து: நோபல் அறிஞர் வி. ராமகிருஷ்ணன்


UPDATED : ஜன 04, 2011 12:00 AM

ADDED : ஜன 05, 2011 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2011 12:00 AM ADDED : ஜன 05, 2011 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்தியாவின் இளைய விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் நடத்தப்படும் இந்த மாநாட்டை, சமீபத்தில் வேதியியலுக்காக நோபல்பரிசு பெற்ற தமிழகத்தின் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


குழந்தைகளுக்காக நடத்தப்படும் 18 வது அறிவியல் மாநாடு இதுவாகும். இம்மாநாட்டின் கருப்பொருள் "நில வளங்கள்" என்பதாகும்.


இந்த நிகழ்வில் உரையாற்றிய வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், விஞ்ஞானி என்பவர் தனிப்பட்ட நாட்டிற்கு அல்லாது, உலகிற்கே ஒரு பொது சொத்து ஆவார் என்றார். மேலும் அவர் கூறியதாவது,


"நம்மை சுற்றியிருக்கும் பொருட்களைப் பற்றி தர்க்கரீதியாக ஆராய்ந்து, மறைந்துள்ள உண்மைகளை கண்டுபிடிக்கும் மகத்தான பணியே அறிவியலாகும். அதேசமயம், அத்தகைய ஒரு பெரிய முயற்சியில் ஒருவர் காணும் உண்மையே உலக உண்மையாகிவிடாது. நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அறிவியல் உண்மைகள் காலப்போக்கில் மாறலாம்.


விஞ்ஞானி என்பவர் இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுவானவர். அவர் எந்த நாட்டிற்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. நான் நோபல்பரிசு பெற்றவுடன் இந்தியாவிலிருந்து நிறைய வாழ்த்துக்கள் வந்தன. இந்தியர்கள் என்னை தங்களின் சொத்தாக நினைத்தாலும், நான் ஒரு உலக பொது சொத்துதான்.


விஞ்ஞானி என்பவர் ஒரு சினிமா நட்சத்திரமோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரமோ அல்ல. அவர் எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடங்காத ஒரு உலக நட்சத்திரம். இந்த நினைப்பை மனதில் வைத்து இளைய விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும்" என்றார்.


இம்மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 14 இளைய விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விருது 25 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழும் அடங்கியது. அதேசமயம் இந்த விருதைப் பெற்றவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இந்த குழந்தைகள் மாநாட்டை ஒட்டி, அறிவியல் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் என்.சி.இ.ஆர்.டி. மூலம் 24 ப்ராஜக்டுகளும், என்.சி.எஸ்.சி. மூலம் 66 ப்ராஜக்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த ப்ராஜக்டுகள் முக்கியமாக குழந்தைகள் செய்த கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியது. இந்த கண்காட்சி வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us