தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: சென்னையில் ஜூன் 13ல் தொடக்கம்

தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: சென்னையில் ஜூன் 13ல் தொடக்கம்

தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: சென்னையில் ஜூன் 13ல் தொடக்கம்


UPDATED : ஜூன் 01, 2026 09:50 AM

ADDED : ஜூன் 01, 2026 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 09:50 AM ADDED : ஜூன் 01, 2026 09:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'தினமலர்' நாளிதழ் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் ஜூன் 13ம் தேதி தொடங்குகிறது.

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், பல்கலை வளாக கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, பி.இ., பி.டெக்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், 'ஆன்லைனில்' நடத்தப்படுகிறது.

பி.இ., பி.டெக்., பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு வழிகாட்டிடும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டும் தமிழகம் முழுதும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சென்னையில் வரும் ஜூன் 13ம் தேதி, இன்ஜினியரிங் வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

சென்னை தி.நகர் வாணி மஹாலில், காலை 10:00 முதல், பகல் 12:30 மணி வரையிலும், பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கத்தில் உள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன வளாகத்தில், மாலை 03:00 முதல் 05:30 மணி வரையிலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், இன்ஜி., ஆன்லைன் கவுன்சிலிங் அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, கல்லுாரிகளின் 'கட் ஆப்' மற்றும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறை, சேர்க்கை ஆணை பெறுதல், கவுன்சிலிங்கில் நடப்பாண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை, முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜி.நாகராஜன் விளக்கம் அளிக்கிறார்.

அதே போல, நடப்பாண்டு உங்கள் 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரி கிடைக்க வாய்ப்பு; நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம்; சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி நேரடியாக விளக்கம் அளிக்க உள்ளார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்க கட்டணம் கிடையாது; அனுமதி இலவசம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us